350 கிராம் கொக்கேய்னுடன் பிரேஸிலிலிருந்து வந்த மெசிடோனிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையின்போது அவரது பை ஒன்றில் நான்கு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சூப் பொதிகள் போன்று பொதி செய்யப்பட்டிருந்த கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் இரண்டு கோடி ரூபா என சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
