இலங்கையின் அந்நிய செலாவணி பிரச்சினையை இந்தியா மற்றும் சீனாவின் உதவியுடன் தீர்க்கமுடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்துரைத்துள்ள அவர், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி வெளிநாட்டு செலாவணி இருப்பு 3 பில்லியன் டொலர்களாக உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் சுற்றுலாத்துறையில் சுமார் 10 பில்லியன் டொலர்கள் நட்டமேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .










