இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில் : சாரதி மீது மக்கள் தாக்குதல்

ஹொரணை, பல்லபிட்டிய பிரதேசத்தில் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதியை அப்பிரதேச மக்கள் தாக்கியதையடுத்து பொலிஸார் தலையிட்டு சாரதியை பெரும் பிரயத்தனப்பட்டு மீட்டு கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்விபத்தில் இரு பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அம்புயூலன்ஸ் மூலம் ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Articles

Latest Articles