இரத்தினபுரி , கலவான – வேவல்கந்துர தோட்டத்தில் உள்ள தமிழ் குடியிருப்பாளர்களின் வீடுகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மலசலக்கூடங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
10 இற்கு மேற்பட்டவர்கள் வந்தே நேற்று முன்தினம் இரவு தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும், இதனால் 16 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தாலும் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கலவான பொலிஸாரிடம் வினவியபோது,
” இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையே மோதலுக்கு காரணம். தற்போது நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.” – என்று தெரிவித்தனர்.
மேற்படி தோட்டமானது தனியார் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவருகின்றது.


