இரத்தினபுரி சன்னஸ்கம உள்ளிட்ட காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக காடழிப்பு முயற்சிகள் இடம் பெற்று வருவதாக பிரதேச மக்கள் முறையிடுகின்றனர்.
இச்செயற்பாடுகள் காரணமாக இப்பிரதேசத்தின் வன வளங்கள் பரவலாக பாதிக்கப்படுவதுடன் காட்டு மிருகங்கள், பிராணிகள் வேறு இடங்களுக்குத் தப்பிச் செல்வதாகவும் பிரதேச நீர் வளங்கள் வற்றி வருவதாகவும் இவர்கள் முறையிடுகின்றனர்.
இவ்விடயத்தில் பாதுகாப்பு தரப்பினரின் கவனம் திரும்பியுள்ள போதிலும் அரசியல் அதிகாரத்தரப்புக்களின் ஒத்துழைப்புக்கள் காரணமாக பரவலாக இச்செயற்பாடுகள் தொடர்ந்து வருவதாக கிராம வாசிகளும் சுற்றாடலியலாளர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
