இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீடுமீது தாக்குதல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீடுமீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

களனி, சரச்சந்திர டயஸ் மாவத்தை, கோனவில, பமுனுவில என்ற முகவரில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் வீட்டின் எட்டு ஜன்னல்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலின் போது இராஜங்க அமைச்சரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ வீட்டில் இருக்கவில்லை. காவலாளி மட்டுமே இருந்துள்ளார்.

இனந்தெரியாத ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles