நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி J.D. மான்னப்பெரும இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் அவர் கையளித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியை இராஜினாமா செய்வதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சிவில் நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் தொடர்ச்சியாக இராஜினாமா செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.