இரு இளைஞர்களின் உயிரை பறித்த விபத்து – காத்தான்குடியில் சோகம்!

மட்டக்களப்பு, காத்தான்குடி, புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

புதுகுடியிருப்பு சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார்சைக்கிளில் மூவர் பயணித்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பை சேர்ந்த 16 மற்றும் 18 வயதான இரண்டு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles