அநுராதபுரம் ஒயாமடுவ தேவாலயத்திற்கு பின்னால் அமைந்துள்ள குளத்து கட்டில் வைத்து 5 மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவருக்கு தடி ஒன்றை காட்டி அச்சுறுத்தி வற்புறுத்தி கசிப்பு குடிக்கவைத்த சம்பவத்துடன் தொடர்புடைய கசிப்பு வியாபாரி ஒருவரை நேற்று முன்தினம் (09) கைது செய்துள்ளதாக ஒயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 25 வயது கசிப்பு வியாபாரியாவர். பொலிஸ் அவசர சேவை இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய ஒயாமடுவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் சிறுவர்கள் இருவரையும் பொறுப்பேற்றுள்ளனர்.
குறித்த இடத்திற்கு விஜயம் செய்த போது சிறுவர்கள் இருவரும் கசிப்பு குடித்ததால் கடும் போதையில் அவதிப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கசிப்பு குடித்ததில் சுகயீனமடைந்த நிலையில் 10 வயது சிறுவன் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










