இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பக்தி ஊர்வலம்! 

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒருங்கிணைப்பில் விநாயக சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) பிரம்மாண்ட பக்தி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விசேட பூஜைகளில் பங்கேற்று ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து ஊர்வலம் ஆரம்பமானது.

தெனியாய வீதி வழியாக நகர்ந்து எலட்டன் ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தை அடைந்து, எலட்டன் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் புனித ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் ஆன்மீக பெரியோர்கள், ஆலய நிர்வாக சபையினர், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles