இறம்பொடை விவகாரத்தில் தொழிற்சங்கங்கள் ஏன் மௌனம்?

” இறம்பொடை ஆர்பி தோட்ட மக்களுக்கு தொழில், இருப்பிடம், பாதுகாப்பு தொடர்பான சிக்கல் தோன்றியுள்ள நேரத்தில் தொழிற்சங்கங்கள் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.” – என்று மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட் தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” மலையகத்தின் தொழிற்சங்க உருவாக்கத்திற்காக தொழிலாளர்கள் மாதாந்த சந்தாவை மட்டுமல்ல தம் உயிரையும் கொடுத்துள்ளனர். தம் உயிர் கொடுத்து வளர்த்த, வளர்க்கும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் உரிமைகளுக்காக, அவர்களின் வாழ்வு பாதுகாப்பிற்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் தாம் வளர்த்த சங்கம் தமக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் ஓடி ஒளிந்து விட்டதோ என மலையக உழைப்பு சமூகம் அங்கலாய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்களை தேடி அலையும் நிலையும் வேதனைக்குரியது.

இறம்பொடை பிரதேசம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசமாகும். தற்போது வேறு தொழிற்சங்கங்கள் தோன்றியிருக்கலாம். இப்பிரதேசத்தின் ஆர்பி தோட்ட மக்களுக்கு தொழில், இருப்பிடம், பாதுகாப்பு தொடர்பான சிக்கல் தோன்றியுள்ள நேரத்தில் தொழிற்சங்கங்கள் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இறம்பொடை ஆர்.பி தோட்டம் வரலாற்றில் பலரின் கைகளுக்கு மாறிவிட்டது. அங்குள்ள தொழிலாளர்களுக்கு 90 காலப்பகுதி முதல் ஊழியர் சேமலாப நிதிக்கு பணம் சம்பளத்திலிருந்து வெட்டப்பட்டப் போதும் நிர்வாகம் அதனை அவர்களின் பெயரில் வைப்பில் இடவில்லை. இதற்காக தொழிலாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தபோது எந்த விதமான பாதிலும் அற்ற நிலையில் தற்போது தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தொழிலாளர்கள் வேலைக்கு வராததன் காரணமாக தோட்ட வீட்டை விட்டு வெளியேறுமாறும் தொழிலாளர்களுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரதி இலங்கை தொழிலார் காங்கிரசுக்கும், நிர்வாகம் அனுப்பி உள்ளதாக அறியகிடைக்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு பிரச்சினைகள் நன்றாக தெரிந்திருந்த போதும் இன்னும் அமைதி காப்பது ஏன்? உடனடியாக தலையிட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு? நாங்கள் சந்தா கொடுத்து வளர்த்த தொழிற்சங்கம் யாருக்காக முதலாளிகளுக்காகவா? அல்லது தொழிலாளர்களுக்காகவா?என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்று அரச மற்றும் தனியார் தோட்டங்களிலும், கம்பெனி தோட்டங்களிலும் மலையக தொழிலாளர்களுக்கு தொழில் மற்றும், தொழில் பாதுகாப்பு, வாழ்வு பாதுகாப்பு அற்ற நிலையே காணப்படுகின்றது. பெரும்பாலான அரசு மற்றும் கம்பெனி தோட்டங்கள் தொழிலாளர்களின் பெயரில் வைப்பிலிட வேண்டிய தொழிலாளர் சேம நிதி போன்ற கொடுப்பவனவுகளை அவர்களின் வைப்பிலா இட வில்லை என்று வெளிநாட்டு தோழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறை சார்ந்த குழுவால் கண்டறியப்பட்டுள்ளது. வைப்பிலா இடப்பட்டுள்ள 700 மில்லியன் ரூபாய் தொகையிலும் முரண்பாடு உள்ளதாகவும் அது தெரிவிக்கின்றது.

மலையக மக்கள் இந்நாட்டில் தனது 200 வருட உழைப்பிற்கும் உழைப்பு வாழ்விற்கும் விழா எடுத்துக் கொண்டிருக்கையில் அரச மற்றும் தனியார் தோட்ட கம்பெனிகளில் செயல்பாடு விழாவில் மண் அள்ளி கொட்டுவதாகவே உள்ளது .இந்நிலை நீடிக்குமானால் அது மலையக தேசியத்துக்கே அழிவாக அமைந்துவிடும்.தற்போது சிதைவை சந்தித்துக் கொண்டிருக்கும் மலையக சமூகம் அதனா மழுமையான சிதைவை எவராலும் தடுக்க முடியாது போய்விடும். இதற்கு மலையேக தொழிற்சங்கங்கள் காரணமாக அமைந்துவிடக் கூடாது.மலையக தொழிலாளர்களின் வாக்கு வேண்டுமானால் அவர்களின் இருக்கும் தொழில் பாதுகாப்பும் உரிமையில் முக்கியம் என்பதை தொழிற்சங்கர்கள் உணர வேண்டிய காலம் இது.

அதேபோன்று மலையகம் 200 விழாக்கோளத்தில் மயங்கி நிற்கும் மழையக சிவில் சமூக அமைப்புகளும் மலையக மற்றும் பெருத்தோட்ட மக்களின் இருப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு ,காணி உரிமை விடயத்தில் தொழிற்சங்களுக்கும் மற்றும் மலையக கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேலை திட்டத்தை கூட்டாக முன்னெடுக்க வேண்டும்.அதுவே மலையக தேசியத்தையும் அடுத்த நூற்றாண்டை நூற்றாண்டை நோக்கிய பயணத்தையும் இலகுவாக்கம்.” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles