ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. எனினும், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால் இன்று நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டி இந்தியாவுக்கு வாழ்வா சாவா ஆட்டமாக மாறியுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா தோற்கும் பட்சத்தில் அது இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பெரும்பாலும் இழந்துவிடும் நிலை உள்ளது.மறுபுறம் இலங்கை அணி ஆப்கானுடனான முதலாவது சுப்பர் போர் போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடனேயே இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது. இலங்கை அணி கடைசி இரண்டு போட்டிகளிலும் சவாலான வெற்றி இலக்கை துரத்தியே வெற்றியீட்டியது.இலங்கை துடுப்பாட்ட வரிசை வலுப்பெற்றிருப்பதோடு பந்துவீச்சில் புதுமுக வீரரான வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க, ஆப்கானுக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்துவீசி வருகிறார்.










