‘இலங்கை அணி வீரர்கள் நாட்டுக்கு திருப்பியழைப்பு’

இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பியழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இருவரும் உயிர்குமிழி முறைமையைமீறி செயற்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இவ்வாறு திருப்பியழைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அணியின் முகாமையாளரிடமும் அறிக்கையொன்று கோரப்பட்டது.

Related Articles

Latest Articles