இலங்கை அணி வீரர்கள் மேலும் மூவருக்கு கொரோனா

இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும்  மூன்று வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனஞ்சய டி சில்வா, ஜெப்ரி வான்டர்சே மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றியுள்ளது .

முன்னதாக, இலங்கை அணி  வீரர்களான ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் விளையாட முடியும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles