இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இப்போட்டியலில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் மற்றும் சரித்த அசலங்க ஆகியோர் தலா 46 ஓட்டங்களை குவித்திருந்தனர்.

தனஞ்சய டி சில்வா 32 ஓட்டங்களையும், அஞ்சலோ மேத்தியூல் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பின்னர் 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஆட்ட நாயகனாக சரித அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.

 

Related Articles

Latest Articles