இலங்கை – இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி கண்டி, பல்லகலேவில் இன்று நடைபெறுகின்றது.

கடந்த மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்றதும் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

இதைத்தொடர்ந்து சிம்பாப்வேயில் நடந்த டி20 தொடரை இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி இலங்கை வந்துள்ளது. உலக சாம்பியனான இந்தியா தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் தயாராகியுள்ளது.

இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாவுகம்,கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் இலங்கை அணியும் புதிய கேப்டனான சரித் அசலஙக தலைமையில் களம் இறங்க உள்ளது.மொத்தத்தில் தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.

Related Articles

Latest Articles