இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் டி20 தொடரை இந்தியா வென்ற நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.
தொடரில் முன்னேற இரு அணிகளும் முயற்சி செய்யும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.