இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் மாஜித் மோஸ்லே, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் எகிப்திய தூதுவருடன் சுமுகமான கலந்துரையாடலை நடத்தினார்.
பாதுகாப்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தூதுவர் மொஸ்லே, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகால உறவுகளைப் பேணுவதில்
இலங்கையின் முயற்சிகளைப் பாராட்டினார்.










