இலங்கை வருமாறு நடிகர் கமலுக்கு அழைப்பு

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் சார்ளஸ் மன்னர் மற்றும் ராணி துணைவியாரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சென்னையில் பிரிட்டிஷ் துணை உயர் ஸ்தானிகர் இரவு விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரனும் பங்கேற்றார்.

நிகழ்வின் முதன்மை விருந்தினரான பத்மஸ்ரீ கமல்ஹாசனை சந்தித்த துணை உயர்ஸ்தானிகர், எதிர்காலத்தில் இலங்கைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

Related Articles

Latest Articles