இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினம் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. பிரதான சுதந்திர தின நிகழ்வு தற்போது காலி முகத்திடலில் நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில், இன்றையதினம் கூகுள் டூடுலில் இலங்கையின் தேசிய கொடி இடம்பெற்று, சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
