இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுங்கள்!

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவை – உதவியை ஆஸ்திரேலியாவிடம் இருந்து பெற்றுத் தருமாறு அந்நாட்டு ஆளுநர் நாயகத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண் டுள்ள ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம்சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பி லுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இதன்போதே சஜித்பிரேமதாஸ மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்தார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் அங்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ் வின்போதே மேற்படி இருவரும் இவ்வாறு சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலே நிலவி வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப் படுத்துவதில் கவனம் செலுத்தி இங்கு சுமுகமான உரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஈடுபட்டார்.

இலங்கை ஏற்றுமதி சார்ந்த பொருள்களுக்கு ஆஸ்திரேலியாவில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது கோரிக்கை விடுத்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles