இலங்கையில் 2ஆவது போராட்டத்தை ஏற்படுத்த அமெரிக்கா திட்டம் – பொன்சேகாவும் களத்தில்!

இலங்கையில் 2ஆவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்த போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும் – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் என்பதே முதலாவது போராட்டத்தின் இலக்காக இருந்தது. இதில் கோட்டா கோ ஹோம் என்பது மட்டுமே வெளியில் தெரிந்தது. ரணில் கம் பெக் என்பது திரைமறைவில் இடம்பெற்றுவந்தது.

2ஆவது போராட்டம் ரணில் கோ ஹோம் என வராது, அது வேறு வடிவில் வரும். அதாவது, ரணில் ஆட்சியில் இரும்கும்போது வர்க்க வேறுபாட்டால் ஏற்படும் போராட்டமாக அது அமையும். பட்டினி, வேலையின்மை உள்ளிட்டவற்றால் மக்கள் வீதியில் இறங்கக்கூடும். மக்கள் உணவுகளை கொள்ளையடிக்கலாம், சுப்பர் மார்க்கெட்டிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படலாம். செல்வந்தர்களின் சொத்துகள் சூறையாடப்படலாம்.

உணவை எப்படி பதுக்குவது, அதன்மூலம் எப்படி போராட்டத்தை ஏற்படுத்துவதென்பது எல்லாம் சிஐஏ புத்தகத்தில் உள்ளது. விக்டோரியா நூலண்டால் (அமெரிக்க இராஜதந்திரி) இயக்கப்படும் போராட்டத்தின் 2ஆவது பாகமாகவே இது இருக்கும்.

முதலாவது போராட்டத்தில் ஜனாதிபதியை கொலை செய்துவிட்டு லிபியாவில்போன்று, சர்வதேச தலையீட்டுடன் இடைக்கால ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. அது சரிவரவில்லை. அதனால்தான் தற்போது பிளேன் ‘பீ’ வருகின்றது.

முதலாவது போராட்டத்தின்போது இருப்பவர்கள் வீதிக்கு வந்தனர். 2ஆவது போராட்டத்தில் விவசாயிகள், வேலை இழந்தவர்கள் என பலரும் வருவார்கள்.

முதலாவது போராட்டத்தின்போதும் பொன்சேகாவின் பங்களிப்பு இருந்தது. அவர் மட்டுமே போராட்ட களத்துக்கு செல்லக்கூடியதாக இருந்தது. அமெரிக்க, தூதுவருக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறியுள்ளார். 2010 ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவுக்கு வடக்கில் எப்படி 100 வீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன. லிபியாவில் இடைக்கால அரசு அமைந்தபோது இராணுவ தளபதிகள் உள்வாங்கப்பட்டனர். இலங்கையில் அவ்வாறு நடந்திருந்தால் பொன்சேகாவும் இடைக்கால அரசியல் இருந்திருப்பார். 2ஆவது போராட்டத்துக்கும் பொன்சேகா பயன்படுத்தப்படலாம்.

எதிர்வரும் நவம்பர் மாதமளவில் உணவு நெருக்கடி ஏற்படும். நீர் இல்லை. வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விழிப்பாக இருக்க வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles