நாட்டில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பிலான தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2036 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.
3,403 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 81 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.










