இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதால் பாடசாலைக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரம்வரை குறைவடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
” ஐந்து வயது பூர்த்தியானதும் பாடசாலைக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்து 92 ஆயிரமாக காணப்படுகின்றது.
இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரமாக காணப்பட்டது.” – எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.