இலங்கையில் வருடாந்தம் பெருமளவு உணவுப் பொருட்கள் வீணாவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக 2021 ஆம் ஆண்டில் வீணான உணவின் அளவு 10 மில்லியன் மக்களுக்கு போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் முறையான போக்குவரத்து இன்மையால், வருடாந்தம் 19 வீத மரக்கறிகளும் 21 சதவீத பழங்களும் அழிவடைகின்றன.
இதன்படி வருடாந்தம் 21,955 மெட்ரிக் தொன் மரக்கறிகள் அழிவடைகின்றன.
நுகர்வுக்கு எடுத்துக்கொள்ள முடியாத பழங்களின் அளவு 90,151 மெட்ரிக் தொன்னாகும்.
அறுவடைக்கு பின்னரான அழிவுகளும் அதிகமாகவே காணப்படுகின்றன.
குறிப்பாக நகர்ப்புறங்களிலும் அதிகளவு உணவு வீணாகின்றது. 2021 ஆம் ஆண்டில் வீணான உணவின் அளவு 10 மில்லியன் மக்களுக்கு போதுமானது.” – எனவும் அமைச்சர் கூறினார்.
