‘இலங்கையில் வலுவான சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பு’

கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சுகாதாரப் பாதுகாப்பு இருக்கின்றது என- உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஜெனிவா கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றுநோயைத் தாண்டி உலகில் சுகாதார அமைப்புகளில் பின்னடைவை உருவாக்குவதற்கான நிலை தொடர்பான அறிக்கையை ஸூம் தொழில்நுட்பத்தின் மூலம் உலக சுகாதார அமைப்பின் வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் சமூக மட்டத்திலிருந்து உயர் மட்டத்திற்கு சுகாதார சேவை அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் உதவியாக இருந்தது. இலங்கை, நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும், நமது நாடு சுகாதார குறிகாட்டிகளில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதுடன், அதை உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக் கூடியதாக இருக்கிறது, எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles