இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.முதல் டி 20 போட்டியில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது.நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களும், குசல் பெராரா 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 36 ரன்களுக்குள்  4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
சாம் பில்லிங்சும், லிவிங்ஸ்டோனும் தாக்குப்பிடித்து நின்றனர். அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 18 ஓவரில் 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. லிவிங்ஸ்டோன் 29 ரன்னுடனும், சாம் கரன் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என டி 20 தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது லிவிங்ஸ்டோனுக்கு அளிக்கப்பட்டது.
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles