மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சிறந்த தீர்வு திட்டமாக அமையும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரான பா. சிவநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டங்களை பிரித்து கொடுத்து, அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதே சிறந்த முறை. இது தான் தொழிளாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தின் கனவு.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி, தொழிலாளர்களை பங்குதாரர்களாக மாற்றும் திட்டம் ஏற்புடையதாக அமையாது. அது எமது மக்களை மீண்டும் அடிமைகளாக ஆக்கும் செயலாகும்.
எனவே, இந்த திட்டத்தினை மாற்றி தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட முதலாளியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தோட்டத்தை பிரித்து கொடுப்பதன் மூலமாக சிறந்த வருமானத்தையும், எவருக்கும் அடிமையில்லாமலும் வாழும் சூழ்நிலையையும் உருவாக்க முடியும். நிர்வாகங்களின் கெடுபிடிகளும் இருக்காது.










