இஸ்ரேல்மீது மீண்டும் தாக்குதல்: 10 பேர் பலி!

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.

காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது.

இந்நிலயில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் திடீரென நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், குழந்தைகள் உள்பட 10 பேர் வரை உயிரிழந்தனர்.

பலர் காயமடைந்தனர்.தெற்கு லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதனால், அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்புகிறார் என அவருடைய அலுவலம் தெரிவித்து உள்ளது.

இந்த ராக்கெட் தாக்குதல் பற்றி ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவினர் கூறும்போது, லெபனானில் கிராமம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதற்கு பதிலடியாக, கோலன் ஹைட்சில் உள்ள இராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தினோம் என தெரிவித்தது.

எனினும், இஸ்ரேலின் ராணுவ உயரதிகாரி டேனியல் ஹகாரி கூறும்போது, ஹிஸ்புல்லா அமைப்பு பொய் கூறுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார். அந்த அமைப்பின் முக்கிய தளபதிகளுக்கு எதிராக போர் தொடுக்கும்படி இஸ்ரேல் தலைவர்களிடம் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நெருக்கடி எழுந்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles