ஈராண்டுகளில் நாடு மீண்டமை பொருளாதார அதிசயம்!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாடு இரண்டே ஆண்டுகளில் மீட்கப்பட்ட விதம் ஒரு “பொருளாதார அதிசயம்” என்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

உலகில் வேறு எந்த முன்னேறிய நாடுகளிலும் இத்தகைய தலைவருடன் யாரும் போட்டியிட முன்வரவும் மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (04) மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles