ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஈரானின் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் மத்திய கிழக்காசிய பிராந்தியத்தில் நடைபெறும் தாக்குதலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் ஒத்துழைப்போ, ஆலோசனையோ இல்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.