ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசாங்கத்தின் நபர்கள்: சந்தேகிக்கும் சிறில் காமினி ஆண்டகை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ஒதுக்கி வைத்து விட்டு, விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பும் நபர்களை அரசாங்கம் பின் தொடர்ந்து வருவதாக  சிறில் காமினி ஆண்டகை  தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் நேற்று மீண்டும் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விசாரணைகளை ஒதுக்கி வைத்து விட்டு கேள்வி எழுப்பும் நபர்களை பின் தொடர்வதன் ஊடாக விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சி மாத்திரமல்லாது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையாக சூத்திரதாரிகளை பாதுகாக்க முயற்சிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களும் இருக்கின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகம் எவருக்கும் எழக்கூடியது.

இப்படியான சந்தேகங்கள் ஏற்படுவதை பயமுறுத்தல்கள் மூலமோ, அச்சுறுத்தல்கள் மூலமோ நிறுத்தி விட முடியாது. அவ்வாறான சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க நியாயமான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிறைவேற்றுவதற்காக கத்தோலிக்க திருச் சபை எடுக்கும் முயற்சிகளை எந்த வகையிலும் நிறுத்த போவதில்லை.

பயமுறுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள் மூலம் நீதியை தேடும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் என அரசாங்கத்தின் பிரதானிகள் நினைத்தால், அது மிகப் பெரிய கேலி.

முன்னாள் சட்டமா அதிபர் கூட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சி இருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதை நம்ப நேரிடும் எனவும் சிறில் காமினி ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles