உகண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றார்.
உகண்டாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி 71.65 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-வது முறையாக மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 43 வயதான பாபி வைன் 24.72 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார்.
சுமாா் 4.5 கோடி மக்கள்தொகை கொண்ட உகண்டாவில், இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இருப்பினும், 52 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களித்தனர்.
1986-ல் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, யோவேரி முசேவேனி ஜனாதிபதியாக பதவியேற்றார்.
நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சியான முசேவேனியின் தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சி, வயது மற்றும் பதவிக்கால வரம்புகளை நீக்க அரசியலமைப்பை பல முறை மாற்றியதன் மூலம் முசேவேனியின் பதவியும் தக்கவைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.










