உக்ரைனின் கேர்சன் பகுதி அரசு கட்டிடத்தில் ரஷிய கொடியை ஏற்றிய ராணுவ வீரர்கள்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இரண்டாவது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை கைப்பற்றி உள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டிடத்தில் ரஷிய தேசியக் கொடியை அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஏற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உக்ரைனின் செர்னோபில் மற்றும் மிலிடோபோல் நகர்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles