உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் – ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டெனிஸ் ஷிம்ஹால் பிரதமராக உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.
இந்நிலையில் உக்ரைனின் 19 ஆவது புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் என்பதுடன் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் தலைமை தாங்கினார்.