உக்ரைன், அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் வெள்ளை மாளிகையில் கடும் வாக்குவாதம்;: ஜெலன்ஸ்கி வெளியேற்றம்!
3ஆம் உலகப்போருக்கு வழிவகுக்காதீர்: உக்ரைன் ஜனாதிபதிக்கு வெள்ளைமாளிகையில் பாடமெடுத்த ட்ரம்ப்
போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சு தோல்வியில் முடிந்தது.
உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்துவருகின்றார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலை பேசியில் உரையாடினார்.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதியையும் அழைத்து வெள்ளை மாளிகையில் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
“ நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்? நீங்கள் இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள்;, 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் முடிந்திருக்கும்.” என்று அமெரிக்க ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யா உடன் போரில் உக்ரைன் வெல்லப்போவதில்லை. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியால் 3ம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் டிரம்ப் கடுமையாக சாடினார்.
பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இடையே
‘நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் ஜனாதிபதி மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.
இதனால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி கிளம்பி சென்றார்.