உக்ரைன் உளவுத்துறை அலுவலகத்தை தகர்த்தது ரஷிய படை

உக்ரைன் மீது ரஷிய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலும் ரஷிய படை பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகம் மீது ரஷிய படை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு ஆசோவ் கடற்பகுதியில் தங்களது 2 சரக்கு கப்பல்களை ஏவுகணை மூலம் உக்ரைன் தாக்கியதாக ரஷியா புகார் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles