உக்ரைன் ஜனாதிபதியை சந்திக்க புடின் மறுப்பு!

” உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை.” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

அவர் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு நடத்தினார்.

பின்னர் உக்ரைன் ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து பேசினார். இதில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், புடின் ஏன் ஜெலன்ஸ்கியை சந்திக்க இவ்வளவு தயங்குகிறார்? என்று டிரம்ப் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு டிரம்ப் பதிலளிக்கையில்,

” உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்க மாட்டோர். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை. இரண்டு போர்க்கால தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் சந்திக்கலாம்.

ரஷ்ய ஜனாதிபதி புடின்- உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்திக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும். அடுத்த ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு அதில் தலையிடுவேன். நான் எப்போதும் சொல்வேன். நான் ஒரு சந்திப்பை நடத்தி ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முன்பு அவர்கள் சந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles