உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டத்தை வகுப்பதற்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2023.01.16 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஆலோசனைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அடிப்படை வரைபுக்கமைய, சட்ட வரைபொன்றை
தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள், மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்










