உப தபால் அதிபரின் பணப்பை கொள்ளை!

சைக்கிள் முன்கூடையில் இருந்த பணப் பை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது என்று யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் கோப்பாயில் நடந்துள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப தபால் அதிபரான பெண், தனது பிள்ளையை ஏற்றிச் சென்றபோது சைக்கிளின் முன்கூடையில் பணத்துடன் கூடிய பை இருந்துள்ளது. அதில் உப தபால் அதிபரின் சொந்தப் பணம் மற்றும் அலுவலகப் பணம் என்பன இருந்தன என்று கூறப்படுகின்றது.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முன்கூடையில் இருந்த பணத்துடன் கூடிய பையை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles