க.பொ.த. உயர்தர பரீட்சை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால் பரீட்சைகளை உத்தேச திகதிகளில் நடத்துவது சந்தேகம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் அனுப்பாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும் என்ற கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனால் குறித்த திகதிகளில் பரீட்சைகள் நடைபெறுமா என்பதில் தற்போது சந்தேகம் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.