உயர்தரத்துக்கு தெரிவானோர் விபரம் வெளியானது!

வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 236,053 பேர் உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளனர் – என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

சாதாரண தரப் பரீட்சையின், அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறாததால், அந்த விடயதானம் இன்றியே பெறுபேறு வெளியிடப்பட்டது.

இதன்படி மேற்படி செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாடசாலைகள் ஆரம்பமானதும், செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles