உயர்தரப்பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நாளை(27), நாளை மறுதினம்(28) மற்றும் எதிர்வரும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை நடைபெற மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேற்படி நாட்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 நாட்களுக்கு பிறகு நவம்பர் 30 ஆம் திகதி சனிக்கிழமை உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles