உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் புதிய தகவல்கள் அம்பலம்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளியாகாத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்த வண்ணமுள்ளன. அதன் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றம்தில் வெளிப்படுத்தினார்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அசாத் மௌலானா உட்பட தேவையான நபர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது விடயத்தில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.

இதுவரையில் வெளிவராத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்தவண்ணமுள்ளன. அவற்றின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபையில் பகிரங்கப்படுத்தினார். விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம். விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அது விரைவுபடுத்தப்பட்டு, நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை இடம்பெறும்.” – என்றார்.

Related Articles

Latest Articles