உர மூடையின் விலை 4 ஆயிரம் ரூபாவால் குறைப்பு

விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 கிலோ எடையுள்ள அனைத்து வகையான உர மூடையின் விலையையும் 4000 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக மொறவகயில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ பொதுக்கூட்டத்தில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.-

Related Articles

Latest Articles