உலக சுகாதார அமைப்பிலிருந்து இலங்கை வெளியேறாது எனவும், குறித்த அமைப்பு மேலும் வலுவடைய வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதற்கு நாம் தீர்மானிக்கவில்லை. அமெரிக்கா சுயாதீன நாடு. முடிவுகளை எடுக்கும் உரிமை அந்நாட்டுக்கு உள்ளது. எனினும், உலக சுகாதார அமைப்பில் இருந் எந்தவொரு நாடும் வெளியேறுவதை நாம் விரும்பவில்லை. மாறாக மேலும் பல நாடுகள் இணைந்து குறித்த அமைப்பு வலுவடைய வேண்டும்.
மாறாக நாடுகள் வெளியேறினால் உலக சுகாதார அமைப்பு பலவீனமடையும். பிறகு தொழில்நுட்பம் மற்றும் நிதி ரீதியிலான விடயங்களில் சிக்கல் வரக்கூடும்.” – என்றார்.
