பாதுகாப்பு ஊழியர்களை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நடந்த வித்தியாசமான சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் ஓடினார்.

இதனால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டது.

போட்டியின் 13வது ஓவரின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த நபரொருவர் திடீரென மைதானத்துக்குள் புகுந்து இந்திய வீரர் கோஹ்லிக்கு அருகில் ஓடினார்.

எனினும் உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் குறித்த நபரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles