உலகளவில் அடிமைகளாக இருப்போர் எண்ணிக்கை 50 மில்லியன் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் எல்லா வகையான நவீன அடிமைத்தனத்தையும் ஒழிக்க ஐ.நா இலக்குக் கொண்டுள்ளது.
ஆனால் 2016ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே கட்டாயத் திருமணத்துக்கும் கட்டாய வேலைக்கும் ஆட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 10 மில்லியன் அதிகரித்ததாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 28 மில்லியன் பேர் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதும் 22 மில்லியன் பேருக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
