உலகளவில் அதிக மொழிகள் பேசும் பட்டியலில் ஆஸ்திரேலியா 317 மொழிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் உள்ளது. பூர்வீக குடிமக்கள் மட்டுமில்லாது, பிற நாடுகளுக்கு வேலைநிமிர்த்தமாக இடம் பெயர்ந்ததோடு அங்கேயே பல ஆண்டுகளகாக இருப்பவர்களாலும் அந்நாட்டில் பல மொழிகள் பேசப்படுகிறது.
இவ்வாறு சமீபத்தில் நடத்தப்பட்ட மொழிகள் குறித்த ஆய்வின் படி உலகளவில் 7 நாடுகளில் அதிக மொழிகள் மொழிகள் மற்றும் பண்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் எத்னலோக் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பசிபிக் கடலில், சுமார் 4,62,840 கிலோ மீட்டர் பரப்பளவுடன் தீவு நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக பப்புவா நியூ கினி உள்ளது. இங்கு டொக் பிசின், கிரி மற்றும் மோட்டு என இந்த 3 அதிகாரப்பூர்வ மொழிகளுடன் 840 மொழிகள் பேசப்படுவதோடு உலகளவில் அதிக மொழி பேசும் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் அதிக மொழி பேசும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தோனேசியா உள்ளது. இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இந்தோனேசியன் இருந்தாலும், இந்நாட்டில் மொத்தம் 715 மொழிகள் பேசப்படுகிறது.
பட்டியலில் மூன்றாம் இடத்தில் நைஜீரியா உள்ளது. 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நைஜீரியா, ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு மற்றும் அதன் மிகப்பெரிய ஜனநாயகம் நாடாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் பல இன மக்கள் வசித்தாலும் ஆங்கிலம் பிரதானமாக உள்ளது. இருந்தப்போதும் இந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 23 சதவீதம் பேர் அவர்களது வீட்டில் ஆங்கிலம் இல்லாத மொழிகளைப் பேசுகிறார்கள் என்கிறது ஆய்வுகள். இதோடு ஆஸ்திரேலியா நாட்டு மக்கள் பேசுவதற்கு 317 மொழிகள் உள்ளன. பட்டியலில் ஆஸ்திரேலியா ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்க மக்கள் மட்மில்லாது பிற நாடுகளிலிருந்து பணிநிமிர்த்தமாக வந்து கிரீன் கார்டு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகம் பேர் உள்ளனர். இதன் படி 337 மொழிகள் அமெரிக்காவில் பேசப்படுகின்றன. உலகளவில் 7வது இடத்தில் உள்ளது.










