கொவிட் – 19 தொற்று இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 வைரஸ் 2020 ஆம் ஆண்டில் பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் , வூஹானை மையமாகக் கொண்டு, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த வைரஸ் தோற்றியது. இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறியது.
இருப்பினும், கொவிட் – 19 தொற்று சீனாவுக்கு தற்போதும் பாதிப்பாகவுள்ளது. அதனை கட்டுப்படுத்த சீனா விதித்துள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகள் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், உலகின் பிற பகுதிகளில் இந்த நிலைமை முற்றிலும் வேறுபட்டது. வெற்றிகரமான தடுப்பூசி செலுத்துகை ஊடாக கொரோனா வைரஸின் தீவிரம் குறைக்கப்பட்டதன் மூலம், வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.










